Brahmaputra Pushkaram (2019)
இந்தியாவில் ஓடும் நதிகளை இமய நதிகள் என்றும், தீபகற்ப நதிகள் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இமய நதிகள் இமய மலையில் உருவாகின்றன. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியவை இமய நதிகளில் முக்கியமானவை. இவற்றில் மழைக் காலத்தில் மழை நீர் ஓடும். கோடையில் பனிக்கட்டி உருகிக் இந்த நதிகளில் நீர் ஓடும். ஆண்டு முழுவதும் இவற்றில் நீர் ஓடுவதால் இவற்றை ஜீவநதிகள் என்று கூறுகிறார்கள். தீபகற்ப நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகின்றன. கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி,காவிரி, பீமா வைகை, தாமிரபரணி முதலியவை தீபகற்ப ஆறுகளில் முக்கியமானவை.
பிரம்மபுத்திரா புஷ்கரம்
பிரம்மபுத்திரா நதி , இந்தியாவில் உள்ள 12 புஷ்கர நதிகளில் (கங்கை, நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, பீமா,தாமிரபரணி, சிந்து, துங்கபத்திரா, பிரம்மபுத்ரா,பிரணீதா) ஒன்றாகும். . இதன் படி 12 ஆண்டுக்கு ஒரு முறை புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. அதாவது குரு பகவான் தனுசு ராசிக்குள் பிரவேசிக்கும் அந்த பனிரெண்டு நாட்கள் பிரம்மபுத்திரா புஸ்கரம் கொண்டாடப்படுகிறது. இது வரும் நவம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெற உள்ளது. இந்த காலங்களில் குரு பகவான் பிரம்மபுத்திரா ஆற்றில் பயணிப்பதால் நதி பிரகாசமாக இருக்கும் என்றும், அந்த நேரம் நதியில் நீராடினால் நமது கவலைகள், பாவங்கள் தொலைந்து விடும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த ஆண்டு (2019) வரும் பிரம்மபுத்திரா புஷ்கரமானது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகா பிரம்மபுத்திரா புஷ்கரம் ஆகும்.
பிரம்மபுத்திரா ஆறு
பிரம்மபுத்திரா ஆறு என்பது ஆசியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றாகும். இவ்வாறு திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ (Tsangpo) என்ற பெயரில் புறப்பட்டு திபெத்திலுள்ள உலகின் ஆழமான பள்ளத்தாக்கான யர்லுங் இட்சாங்போ ( Yarlung Zangbo) பெரும் செங்குத்து பள்ளத்தாக்கு உட்பட பல பள்ளத்தாக்குகளின் வழி கிழக்கு நோக்கி பயணப்பட்டு நாம்சா-படுவா (Namcha Barwa) மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாசல பிரதேசத்தில் சியாங் (Siang) என்ற பெயரில் நுழைந்து, பின் சமவெளிப் பகுதியை அடைகிறது, சமவெளிப்பகுதியில் இவ்வாறு திகாங் (Dihang) என்று அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங் ( Dibang ) மற்றும் லோகித் (Lohit) என்ற ஆறுகளோடு கூடி மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது.. அசாமிலுள்ள துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு ( Sankosh River) இதனுடன் கூடுமிடத்தில் தெற்கு நோக்கி வங்காள தேசத்தில் பாய்கிறது. வங்காளதேசத்தில் இந்த ஆறு ஜமுனா (Jamuna) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா, ஒருசில இடங்களில் 10 கிமீ வரை அகலமுடையதாயிருக்கிறது. திப்ரூகட் (Dibrugarh) அருகே அது இரண்டாகப் பிரிகிறது. பிரிந்த அவ்விரு கிளைகளும் நூறு கிலோமீட்டருக்கு அப்பால் இணைகின்றன. இதனால் உருவாகியுள்ள தீவு மஜிலித்தீவு (Majuli island) என்று அழைக்கப்படுகிறது. ஆற்றால் உருவாக்கப்பட்ட தீவுகளில் இது உலகில் இரண்டாவது பெரியதாகும். இதன் குறுக்கே அசாமில் 4940 மீட்டர் நீளமும் 125 மீட்டர் அகலமும் உள்ள போகிபல பாலம் (Bogibeel Bridge) 2002ல் திறக்கப்பட்டது. 2017இல் பயன்பாட்டுக்கு வந்த 9.15 கிமீ நீளமும் 12.9 மீ அகலமும் உடைய தோலா-சாதியா பாலம் (Dhola-Sadiya bridge) அசாமையும் அருணாச்ச பிரதேசத்தையும் இணைக்கிறது, இது இந்தியாவின் நீளமான பாலம் ஆகும். அசாமிலுள்ள 2284 மீ நீளமுடைய நாரநாராயண் சேது பாலம் (Naranarayan Setu) இரட்டை அடுக்கு பாலமாகும் கீழ் தளத்தில் தண்டவாளமும் மேல் தளத்தில் சாலையும் உள்ளது, இது 1998இல் திறக்கப்பட்டது.
இதன் சராசரி ஆழம் 38 மீட்டர், அதிகபட்ச ஆழம் 120 மீட்டர் . மழை காலத்தில் வெள்ள பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு இவ்வாறுக்கு அதிகம். சராசரியான நீர் வெளியேற்றம் விநாடிக்கு 19,800 கன மீட்டர்.
இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில கலக்கின்றது. மொத்தம் 2800 கிமீ நீளமுள்ள இந்த ஆறு, திபெத்திலேயே சரி பாதிக்கும் மேல் பயணிக்கிறது. இது கங்கையின் கிளையாகிய பத்மாவுடன் இணைந்து மிகப்பெரிய கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
பொதுவாக இந்தியாவில் நதிகளை பெண்பால் பெயரிட்டு அழைப்பது வழக்கம், ஆனால் இவ்வாறு 'புத்திரா' என்று முடிவதால், இது சிறப்பாக ஆண்பால் பெயரிட்டு வழங்கப்படுகின்றது. மேலும் இந்திய நாட்டில் உள்ள ஆறுகளில் ஆண் பெயர் கொண்ட ஒரே நதி இது.
பிரம்மபுத்திராவின் கரைகளில் பல தொன்மை வாய்ந்த கோவில்களும், புனிதமான இடங்களும் அமைந்துள்ளன. சக்திபீடங்களில் ஒன்றான காமாக்யா கோவில் இதன் கரையில் தான் அமைந்துள்ளது. குரு தேக்பஹதூர் ஸாஹிப் குருத்வாரா என்று கூறப்படும் சீக்கியர்களின் கோயில், அஸ்ஸாமில் உள்ள துப்ரி ஆற்றின் கரைகளிலே அமைந்துள்ளது. 1505களில் குருநானக் இந்த இடத்திற்கு வருகை தந்தார். இந்த குருத்வாரா அவர் வந்து சென்ற 160 ஆண்டுகளுக்குப் பிறகு குருதேக் பஹதூரால் கட்டப்பட்ட்து.
அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா புஷ்கரம் நடைபெறும் சில முக்கிய இடங்கள் வருமாறு:–
1) Kamakhya Temple
2) Umananda Temple
3) Shri Shri Aswaklanta Temple
4) Majuli island
5) Kajali Choki Bishnu Mandir
6) Kachari Ghat
7) Kashasila Kali Mandir
8) Narasingha Mandir
9) No.1 Chaulkhowa
10) No. 2 Chaulkhowa
11) Sarai Ghat
12) Maa Laheswri Mandir
13) Naranarayan Setu
மேலுள்ள ஏதாவது இடங்களில் அல்லது பிரம்மபுத்திரா நதி பிரயோகிக்கும் ஏதாவது ஒரு இடத்தில், பிரம்மபுத்திரா புஸ்கரம் நடைபெறும் இந்த புண்ணிய தினங்களில் (நவம்பர் 5 முதல் நவம்பர் 15 வரை) புனித நீராடி எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெறுவோம்.....
நதியை நன்றியுடன் வணங்குவோம்! பாதுகாப்போம்!
- Dr. P.V. Praveen Sundar MCA,M.Phil (CS), Ph.D (CS)


Comments
Post a Comment