Brahmaputra Pushkaram (2019)
இந்தியாவில் ஓடும் நதிகளை இமய நதிகள் என்றும், தீபகற்ப நதிகள் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இமய நதிகள் இமய மலையில் உருவாகின்றன. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியவை இமய நதிகளில் முக்கியமானவை. இவற்றில் மழைக் காலத்தில் மழை நீர் ஓடும். கோடையில் பனிக்கட்டி உருகிக் இந்த நதிகளில் நீர் ஓடும். ஆண்டு முழுவதும் இவற்றில் நீர் ஓடுவதால் இவற்றை ஜீவநதிகள் என்று கூறுகிறார்கள். தீபகற்ப நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகின்றன. கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி,காவிரி, பீமா வைகை, தாமிரபரணி முதலியவை தீபகற்ப ஆறுகளில் முக்கியமானவை. பிரம்மபுத்திரா புஷ்கரம் பிரம்மபுத்திரா நதி , இந்தியாவில் உள்ள 12 புஷ்கர நதிகளில் (கங்கை, நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, பீமா,தாமிரபரணி, சிந்து, துங்கபத்திரா, பிரம்மபுத்ரா,பிரணீதா) ஒன்றாகும். . இதன் படி 12 ஆண்டுக்கு ஒரு முறை புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. அதாவது குரு பகவான் தனுசு ராசிக்குள் பிரவேசிக்கும் அந்த பனிரெண்டு நாட்கள் பிரம்மபுத்திரா புஸ்கரம் கொண்டாடப்படுகிறது. இது வரும் நவம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெற உள்ளது...